Wednesday, January 7, 2009

பணம்

பண விஷயங்கள் மற்றும் நம்மில் பலரின் உளவியல் ரீதியான போக்கு சமுதாயத்தில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் நிலை இல்லாமையையும் ஏற்படுத்தி வருவதை காண முடிகிறது. நம்மில் பலர் மூட்டை மூட்டையாக நமது பணத்தை கோட்டை விட்டு விட்டு ஐந்து ரூபாய் பத்து ரூபாய் விஷயங்களுக்கு சண்டை போட்டு கொண்டிருப்பதை காண்கிறோம் . தெருவில் செல்லும் காய்கறி விற்பவரிடம் பேரம் பேசி ஒரு ரூபாய் குறைக்கும் முனைப்பை , சற்றே நம்மை விட பலம் பொருந்தியவரிடம் காண்பிக்க தவறி விடுகின்றோம் . இதை எல்லாம் செய்தால் சமுதாயம் சண்டை கோழி என்ற பட்டத்தையும் நமக்கு தந்து விடுகிறது. பலம் பொருந்தியவரிடம் பகைத்து கொள்ள விரும்பாத நாம் , ஒரு நிமிடம் பார்த்து விட்டு ஆயிர கணக்கில் பணம் வாங்கும் மருத்துவர், லட்ச கணக்கில் அநியாய வசூல் செய்யும் கல்லூரிகள் , ஆடம்பரத்தை காட்டி பணம் வசூல் செய்யும் ஹோட்டல்கள் , ஆடம்பர விடுதிகள் , வியாபார நிறுவனங்கள் போன்றவற்றிடம் கேள்வி கேட்காமல் அநியாயமாக நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை கோட்டை விட்டு விட்டு வருகின்றோம். இவ்வாறு டிமான்ட் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களின் விலை தனி நபர்களின் விருப்பதிற்கேற்ப ஏற்ற பட்டு கொண்டிருப்பதினால் தான் பண வீக்கம் போன்ற பிரச்சனைகளால் நமது பொருளாதாரம் பாதிக்க பட்டு கொண்டிருக்கிறது . ஆடம்பரத்தையும் , எளிதில் கிடைப்பதையும் , கடன் வாங்கி பொருள் சேர்க்கும் மக்களின் போக்கை மோப்பம் பிடித்து விட்ட வியாபார நரிகளின் தந்திரமே நம்மை பலி கடவாக்கி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது . எனவே விழிப்புடன் இருந்து நம்மையும் காத்து நம் பொருளாதரத்தையும் மேம்பட செய்வது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும் .

வணக்கம்

நண்பர்களே நலமா ? தங்களுக்கு ஏதேனும் உருப்படியாய் என்ன எழுதி வைப்பது என்று சிந்தித்து கொண்டே இவ்வளவு நாட்கள் ஓடி விட்டன. நிறைய தலைப்புகள் எழுத நினைத்து தோன்றி மறைகின்றன . ஆனால் அனைவரும் பயனடையும் வகையில் பல விஷயங்களை எழுதியே தீர வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றேன் . அதை எனக்கு நானே நினைவு படுத்தி கொள்வதற்காக தான் இந்த பதிவு :) நாம் நமது அலுவல், நமது மகிழ்ச்சி, என்று மட்டும் இருந்து விட்டால் கிடைத்த ஒரே ஒரு வாழ்கையும் பயனற்றதாகி விடுமே என்ற பயம் தான் என்னை எழுத தூண்டுகிறது . எனவே ஏதாவது செய்வோம் கண்டிப்பாக.